தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு செப்டம்பர் 23 அன்று கேரளாவில் நடத்திய சட்டவிரோத கடையடைப்பு, வேலைநிறுத்த போராட்டங்களின் போது அந்த அமைப்பினர் நிகழ்த்திய வன்முறைகளால் ரூ. 5.2 கோடி சேதம் ஏற்பட்டது. இந்த திடீர் பந்த்தைத் தொடர்ந்து, கேரள காவல்துறை 2,500 பேரைக் கைது செய்தது. வன்முறை தொடர்பாக 349 வழக்குகளை பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கில், பி.எப்.ஐ அமைப்பால் ஏற்பட்ட சேதங்களை அந்த அமைப்பிடம் இருந்தே வசூலிக்கவும் அவர்கள் அதனை கட்டத் தவறும் பட்சத்தில் பி.எப்.ஐ’யின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு தொகையை வசூலிக்கமாறும் அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நஷ்டஈட்டை வசூலிக்காமல் அவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனினும் கேரள அரசு அந்த உத்தரவை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டியது. இதையடுத்து உயர் நீதிமன்ற்ம் கேரள அரசை கண்டித்ததுடன் சேதத்துகான பணதை வசூலிக்கும் காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீட்டித்து வழங்கியது. கூடுதல் நீட்டிப்புகள் எதுவும் வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாகக் கூறியது. இந்த சூழலில், கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக கேரள அரசு நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும், பதிவுத் துறையால் இதுவரை கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.