கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த க.சரவணனும், துணை மேயராக தி.மு.கவைச் சேர்ந்த சு.ப.தமிழழகனும் உள்ளனர்.மாமன்ற கூட்டங்கள் நடைபெறும்போது, கவுன்சிலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மேயருக்கு பதில் அளிப்பதற்கு துணை மேயர் தான் பெரும்பாலும்பதிலளிக்கிறார்.என விமர்சனங்கள் இருந்தன.இந்நிலையில்,கும்பகோணம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் க.சரவணன், ‘மாநகராட்சியின் செயல் தலைவரே’ என துணை மேயரை குறிப்பிட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதன் மூலம் எனது பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது’ என குறிப்பிட்டார்.இதுகுறித்து அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், தி.மு.கவின் சு.பதமிழழகன், காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் சென்று, பதவியைத் தனக்கு விட்டுக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், மேயர் பதவியை கட்சித் தலைமை ஒதுக்கியுள்ளது.மேயராக சரவணன் இருந்தால், நீங்கள் செயல் தலைவராக செயல்படுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், சு.பதமிழழகனின் பிறந்தநாளையொட்டி, குடந்தை மாநகராட்சியின் செயல் தலைவரே என குறிப்பிட்டு திமுக கவுன்சிலர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன்.அதற்கு உரிய பதில் அளிக்காத திமுக கவுன்சிலர்கள், என்னை சூழந்து கொண்டு நாங்கள் வைக்கும் தீர்மானத்தில் கையெழுத்து மட்டும் போட வேண்டும், தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றிக் கொள்கிறோம். வார்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ள வரக்கூடாது.நாங்கள் தான் பெரும்பான்மையாக உள்ளோம்.கட்சிக்காக பார்க்கிறோம் என மிரட்டல் விடுத்தனர்.அப்போது, துணை மேயர் கேட்டு கொண்டதால் நான் பேசியதை திரும்பப் பெற்றேன்.மேயராக என்னைச் செயல்பட விடாமல் தி.மு.கவினர் தடுப்பது, மிரட்டுவது குறித்து தமிழககாங்கிரஸ்தலைவர் கே.எஸ்அழகிரியிடம் புகார் அளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.