உலகக் கால்பந்து கோப்பை துவங்குவதர்கு முன்பில் இருந்தே, அதனை தற்போது நடத்தி வரும் கத்தார் நாடு உகலக் கால்பந்து விளையாட்டை தனது மதமாற்ற நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தி வருகிறது. இதற்காகவே சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஜாகீர் நாயக் போன்றோரை அங்கு மதப்ப்பிரசங்கம் செய்ய அழைத்தது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், யூத பார்வையாளர்களுக்கு அவர்களது பாரம்பரிய உணவு வகைகளை வழங்கமுடியாது, அவர்கள் கத்தாரில் தங்கள் மத வழிபாடுகளை செய்யக்கூடாது எனவும் தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தற்போது இந்த வரிசையில் மொராக்கோ நாடும் சேர்ந்துள்ளது. ஸ்பெயினைத் தோற்கடித்து மொராக்கோ அணி உலகக் கோப்பை காலிறுதிக்குத் தகுதி பெற்றது, அந்த அணியை சேர்ந்த ஜகாரியா அபுகல் மற்றும் அப்தெல்ஹமிட் சபிரி ஆகிய இரண்டு விளையாட்டு வீரர்கள் தங்களுடைய ஹோட்டலுக்குத் திரும்பிய பின் ஒரு நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பினர். அதில், கால்பந்து ரசிகர்களையும், பொது மக்களையும் முஸ்லிம் மதத்தை தழுவுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், மொராக்கோ கால்பந்து வீரர்கள் விலையாட்டு மைதானத்திலேயே சஜ்தா அல் ஷுகர் (நன்றியின் வணக்கம்) என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மொராகோ வீரர்களின் இந்த இரண்டு செயல்பாடுகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதைத்தவிர மொராக்கோ கால்பந்தாட்டத்தில் வேறு சில விஷயங்களிலும் செய்தியில் அடிபடுகிறது.உதாரணமாக, ஸ்பெயினுக்கு எதிராக மொராக்கோ வென்றது.இதனையடுத்து ஸ்பெயினில் கலவரங்கள் நடைபெற்றன.போர்ச்சுகலுக்கு எதிராக மொராக்கோ வென்றது, போர்ச்சுகலிலும் கலவரம் வெடித்தது.மொராக்கோ பிரான்சிடம் தோற்றது, பிரான்சில் கலவரம் ஏற்பட்டது. இவ்வகையில் மொராக்கோ வெற்றி அல்லது தோல்வி என எதை பெற்றிருந்தாலும் அதற்கு எதிராக விளையாடும் மற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் திட்டமிட்ட வகையில் கலவரங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பது சிந்திக்கத்தக்கது.