சீனாவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் பரவலாக தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.சில தினங்களுக்கு முன்பு சீனாவின் கட்டுபாடுகளால் கலவரம் வெடித்த நிலையில், சீன அரசு ஒரு சில இடங்களில் மட்டும் சில கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்தது.ஆனால் இந்தத் தளர்வுகளால்அங்கு கொரோனா கணிசமாக அதிகரித்தது வருகிறது. இதனல், கடந்த ஞாயிற்றுகிழமையன்று கூட அங்கு பல கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.சீனாவில் நிலவி வரும் இத்தகைய கட்டுப்பாடுகள் அந்நாட்டு தொழில்துறையில் மேலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில் பாரதத்தின் தொழில்துறை கூட்டமைப்பான சி.ஐ.ஐ கூட்டத்தில் இது குறித்து பேசிய கோட்டக் குழுமத் தலைவர் உதய் கோட்டக், “உலக உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா போன்ற நாடுகள் தற்போது அதனை சரியாக செய்யாததால் உலகப் பொருளாதாரம், வினியோக சங்கிலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அது பாரதம் போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.பாரதத்தில் உற்பத்தி புரட்சியை நாம் முன்பு தவறவிட்டோம்.எனவே சேவை துறையில் ஆவது கவனம் செலுத்த வேண்டும் என பலரும் நினைத்திருக்கலாம்.ஆனால் சீனா தற்போது எதிர்கொண்டு வரும் சிக்கல்களால் பாரதம் அப்போது இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.மத்திய மா நில அரசுகளும் தொழில் நிறுவனங்களும் இதனை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.முதலீட்டாளர்களை கவர வேண்டும்.வணிகம் செய்வதை எளிதாக்க வேண்டும்.இது சர்வதேச சந்தையில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு சிறந்த தனித்துவமான வாய்ப்பாக அமையும்.பாரதத்தின் தொழிற்துறை உற்பத்தி, ஜி.டி.பியில் 16 சதவீதமாக உள்ளது.இது 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.பல நாடுகளும் எரிபொருள் விலையேற்றத்தால் பெரும் பிரச்சனையயை எதிர்கொண்டுள்ளன.சர்வதேச அரசியல் பதற்றம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் நமது பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது.அதனை தக்கவைத்துக் கொள்ள நமக்கு இது சரியான நேரம்” என கூறியுள்ளார்.