தமிழக அரசின் ரம்மி பாடதிட்டம்

சூதாட்டம் என்பதே தவறு. அதுவும், தற்காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு, மூன்றாவது பருவ கணித பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது குறித்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறையே ரம்மி விளையாட்டை கற்றுத் தரும் வகையில் முகவுரை, விளக்கவுரையுடன் இந்த பாடப்பகுதி தரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்மி குறித்த பாடத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆபாச பேச்சாளர் லியோனியின் தலைமையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பாட புத்தகங்களில் வேறு என்ன எதிர்பர்க்க முடியும் என நெட்டிசன்கள் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம் பெற்று இருப்பதாகவும் அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி முழுவதுமாக நீக்கப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.