சிவமடத்தை புதுப்பிக்க பெருந்திட்டம்

காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரும் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் அளித்த பேட்டி ஒன்றில், “வாரணாசியில் மகாகவி பாரதியார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்த வீடு ‘சிவமடத்தை’ புதுப்பிக்க பெருந்திட்டம் பரிசீலனையில் உள்ளது. இந்த ‘சிவமடத்தில்’ மகாகவி பாரதியார் சுமார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்துள்ளார். அவர் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த வீட்டில் தற்போது மகாகவி பாரதியாரின் வழிவந்தவர்கள் வசித்து வருகின்றனர். மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள்  டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். குறிப்பாக அவர் வாழ்ந்த வீடு, இலக்கியப் படைப்புகள், சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கேற்பு, சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் அவர் எவ்விதம் தனது கவிதைகள் மூலம் அணுகினார் போன்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்தும் டிஜிட்டல் வடிவமாக்கப்படும். மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள்  டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். குறிப்பாக அவர் வாழ்ந்த வீடு, இலக்கியப் படைப்புகள், சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கேற்பு, சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் அவர் எவ்விதம் தனது கவிதைகள் மூலம் அணுகினார் போன்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்தும் டிஜிட்டல் வடிவமாக்கப்படும். மேலும் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு ‘சிவமடத்தில்’ பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

சிவமடம்:  காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அனுமன் காட் எனும் பகுதியில் 1898ம் ஆண்டு முதல் 1902 வரை பாரதியார் தனது அத்தை வீட்டில் வசித்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு. பள்ளிப் பருவத்தில் இருந்த பாரதி, இன்றும் இயங்கி வரும்  ஜெய் நாரயண் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் பள்ளிக்குச் சென்று முறையாகப் பயிலவில்லை. ஆனால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் முதலிய மொழிகளை வாரணாசியில் நன்கு கற்றுத்தேர்ந்தார். போஜ்பூரி, அவதி, வங்காளி முதலிய மொழிகளின் அறிமுகமும் அவருக்குக் கிடைத்தது. பள்ளிப் படிப்புக்குப் பிறகு, அன்னி பெசன்ட் நடத்திக்கொண்டிருந்த மத்திய ஹிந்துக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று பாரதி தேர்ச்சிபெற்றார். அவர் காசியில் வாழ்ந்த காலத்தில் பண்டித மதன் மோகன் மாளவியா, அன்னி பெசன்ட், பால கங்காதர திலகர் முதலிய முக்கிய அரசியல் ஆளுமைகளைச் சந்தித்து அவர்களுடன் விவாதித்துப் பல்வேறு தெளிவுகளைப் பெற்றார். இது அவரது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் பின்னாளில் நிறுவப்பெற்றபோது, மாளவியாவின் பெரும் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!” என்று பாடினார் பாரதி. தமிழகத்திற்குத் திரும்பிய பிறகும் காசியில் நடக்கும் நிகழ்வுகளைச் செய்தித்தாள்களின் வழியாக அவர் தொடர்ந்து அறிந்துகொண்டார். அவர் காசியில் வாழ்ந்தபோது சில புகழ்பெற்ற தமிழ்க் கவிதைகளையும் இயற்றியுள்ளார். குறிப்பாக “வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்…” “அர்த்தப் பிரகாசம்” “பாருக்குள்ளே நல்ல நாடு” முதலிய கவிதைகளைக் குறிப்பிடலாம். தமிழர்கள் பல்வேறு தலைமுறைகளாக வசிக்கும் அனுமன் காட் பகுதியில் பாரதியாருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அவரைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் அவ்வீட்டின் ஓர் அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன்கூடிய நூலகத்தை அமைக்கும்  பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.