சென்னையை சேர்ந்த பிரபல கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனமான வேர்ல்ட் விஷனின் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதிக்கான அனுமதி உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது. இது ஒரு கிறிஸ்தவ மத அமைப்பாக இருந்தாலும், அதன் அசல் அடையாளத்தை மறைத்துக்கொண்டு குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக பாடுபடுவதாகக் கூறுகிறது.
இந்த அமைப்பு தனது மத நோக்கங்களுக்காக நிதியைப் பெற்றது, இது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் அளித்த விண்ணப்பத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்கு முரணானது என சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம், 2019ல் இதற்கான ஆதாரங்களுடன் மத்திய உள்துறைக்குக்கு ஒரு புகார் கடிதம் எழுதியது. வேர்ல்ட் விஷன் இந்தியாவின் உரிமத்தை ரத்து செய்யக் கோரியது. மற்றொரு கிறிஸ்தவ எப்.சி.ஆர்.ஏ தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம் இந்தியாவுடன் இணைந்து, பாரத அரசுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் வேர்ல்ட் விஷன் இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மத்திய அரசு, அறிந்தோ அறியாமலோ வேர்ல்ட் விஷன் அமைப்புடன் பல்வேறு மட்டங்களில் இணைந்து செயல்பட்டதுடன் பண உதவிகளையும் வழங்கியுள்ளது. உதாரணமாக, வேர்ல்ட் விஷன் இந்தியாவின் தலைவராக பணியாற்றிய செரியன் தாமஸ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்திற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின்னர் பல்வேறு மாநிலங்களில் உள்ள குடிசைவாசிகளின் வாழ்வில் கொரோனவின் தாக்கத்தை ஆய்வு செய்ய வேர்ல்ட் விஷன் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டது.
வேர்ல்ட் விஷனின் முக்கிய பங்களிப்பானது கல்வி உரிமை (RTE) காரணத்திற்காக உள்ளது என வெளிப்படுத்திக் கொண்டதால், பல மாநில அரசுகள், கல்வி உரிமை முன்முயற்சிகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான அணுகலை அவர்களுக்கு வழங்கியுள்ளன. இதன் மூலம் 3வது கல்வி முறையில் கிறிஸ்தவ பள்ளிகளின் ஏகபோகத்தை வலுப்படுத்தி, ஹிந்து கொடையாளர்களின் இருப்பை அது அழித்து வருவதாக ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
வேர்ல்ட் விஷன் இந்தியா அதன் உண்மையான நோக்கங்களை மறைத்திருந்தாலும், வேர்ல்ட் விஷன் இன்டர்நேஷனல், அதன் தாய் அமைப்பு மற்றும் பெரிய நன்கொடையாளர்களின் கூற்று வேறுவிதமாக உள்ளது. பிந்தைய இணையதளத்தில் ‘விசுவாச அறிக்கை’ என்ற பக்கம் உள்ளது. “இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் நாம் யார் என்பதில் முக்கியமானது” [https://www.worldvision.org/our-work/faith-in-action]. “பைபிள் ஏவப்பட்ட, ஒரே தவறில்லாத, கடவுளின் அதிகாரப்பூர்வ வார்த்தை என்று நாங்கள் நம்புகிறோம்.” [https://www.worldvision.org/statement-of-faith]. “கிறிஸ்தவ விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி நடவடிக்கைகள் எப்போதாவது வேர்ல்ட் விஷன் திட்டங்களில் சேர்க்கப்படலாம்” [http://www.wvi.org/faqs] என்பது உள்ளிட்ட பல இணையதள இணைப்புகள் இந்த நோக்கத்தை உணர்த்துவதாக உள்ளது. வேர்ல்ட் விஷன் இந்தியா 2016 சுயவிவரத்தை ஓபிண்டியா இணையதளம் வெளிப்படுத்திய பிறகு சில தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2018ல், வேர்ல்ட் விஷன் இந்தியா, தமிழக மகளின் ஆதார், பான், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதாகக் கூறி அவர்களின் தனிப்பட்ட விவரங்களை சட்டவிரோதமாக சேகரித்தது. 2018ம் ஆண்டில், The Armies Of God: A Study In Militant Christianity என்ற புத்தகத்தை எழுதிய கல்வியாளர் லெய்ன் புச்சனன், தனது பேட்டி ஒன்றில், வெளிநாட்டுக் கொள்கை நோக்கங்களுக்காக அமெரிக்கா, வேர்ல்ட் விஷன் மற்றும் பிற முக்கிய சுவிசேஷ என்.ஜி.ஓக்களை பயன்படுத்துகிறது. வேர்ல்ட் விஷன் என்பது அமெரிக்க வெளியுறவுத்துறையின் விரிவாக்கப்பட்ட வடிவம் என்று கூறினார்.
அமெரிக்க சிந்தனைக் குழுவான மிடில் ஈஸ்ட் ஃபோரம், வேர்ல்ட் விஷனின் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகளை 2019ல் அம்பலப்படுத்தியது. சூடானைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய நிவாரண முகமைக்கு (ISRA) வேர்ல்ட் விஷன் நிதியளித்தது. இது USAIDன் மானியங்களுடன் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இஸ்லாமிய நிவாரண முகமை 2004ல் ஒசாமா பின்லேடனுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியதற்காகவும், ஹமாஸ் தற்கொலை குண்டுவெடிப்புகளுக்காக நிதி திரட்டியதற்காகவும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
(செய்திக்கட்டுரை ஆதாரம்: https://hindupost.in/dharma-religion/world-vision-indias-fcra-license-suspended-all-you-need-to-know-about-the-christian-ngo/)