அரசியலமைப்பு தின விழா

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறும் அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 1949ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக 2015ம் ஆண்டு முதல் இந்த நாள் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியின் போது, ​​இ கோர்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம், நீதிமன்றங்களின் ஐ.சி.டி செயலாக்கத்தின் மூலம் வழக்குத் தொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறைக்கு சேவைகளை வழங்குவதற்கான முயற்சியாகும். ஏற்கனவே நீதித்துறையை நவீனப்படுத்தும் பல முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. அவ்வகையில், விர்ச்சுவல் ஜஸ்டிஸ் கடிகாரம், ஜஸ்டிஸ் (JustIS) அலைபேசி செயலி 2.0, டிஜிட்டல் கோர்ட் மற்றும் S3WaaS இணையதளங்கள் ஆகியவை பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இத்தகைய முன்முயற்சிகளில் அடங்கும்.