அண்ணாமலை கண்டனம்

திருநெல்வேலியில், சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அவற்றை ஏலம் விடுவதற்காக அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். இவற்றை பெரும்பாலும் மாட்டுக்கறி விற்பவர்கள் தான் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து அவற்றை கொன்று விற்பார்கள். இந்த சூழலில், இதையடுத்து, பா.ஜ.க மாவட்டத் தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட 30 பேர்,அங்கு அடைத்து வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து விட்டனர். இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “வாயில்லா ஜீவனை அடைத்து வைத்து சித்திரவதை செய்த மாநகராட்சி ஊழியர்களை தட்டி கேட்ட தமிழக பா.ஜ.க நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் டி.வி. சுரேஷ், பாளையங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பா.ஜ.கவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களைக் கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக காவல்துறையின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக பா.ஜ.க பெண் தலைவர்களை கொச்சைப்படுத்திப் பேசிய தி.மு.க பேச்சாளரை இன்று வரை காவல்துறை கைது செய்யாமல் இருப்பது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.