பீகாரில் ஒரு லவ் ஜிஹாத்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘லவ் ஜிஹாத்’ வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவ்வகையில், ​​பீகாரில் இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பீகாரின் கதிகாரைச் சேர்ந்த ஹிந்துப் பெண்ணான ஜூலி குமாரியை லவ் ஜிஹாத் வலையில் வீழ்த்தி திருமணம் செய்ய முடிவு செய்த தௌபிக் ஆலம் என்ற முஸ்லிம் நபர், அந்த பெண்ணுடன் சமூக ஊடகத்தில் நட்பு கொண்டார். தன் பெயரை ராஜ் ராஜ்புத் என கூறி போலியாக ஒரு ஹிந்துவாக நடித்தார். டெல்லியில் வசித்து வருவதாக கூறினார். 2016ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அப்போது அவருடைய குடும்பத்தில் இருந்து திருமணத்துக்கு யாரும் வரவில்லை. திருமணத்திற்கு பிறகு ஜூலியை சுபாலில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் தனது வீட்டை விட்டு வெளியே விடாமல் முடக்கினார். ராஜ் ஹிந்து இல்லை என்று மெல்ல அந்த பெண்ணுக்கு புரிய ஆரம்பித்தேன். சில மாதங்கள் கழித்து தௌபீக்கின் சகோதரியால் உண்மை அம்பலமானது. ராஜின் உண்மையான பெயர் தௌபிக் ஆலம் என்பதை அறிந்துகொண்டார். மேலும், தௌபிக் ஆலம் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு 11 வயதில் ஒரு மகள் இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஏன் என்னை ஏமாற்றினாய் என்று கேட்டதற்கு அமைதியாக இருந்து ஒன்றாக வாழ சொன்னதுடன் தன்னை விட்டு செல்ல முயன்றால் ஜூலியையும் அவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். சில நாட்களுக்குப் பிறகு மதம் மாறுமாறு தௌபிக் ஜூலியை வற்புறுத்தினார். நமாஸ் செய்யவும் முஸ்லிம் பெண்களைப் போல உடை அணியவும் சொல்லி அடித்து சித்ரவதை செய்தார். தௌபிக் ஆலம் பணி நிமித்தமாக வளைகுடா சென்றார். இதனையடுத்து ஜூலி காவல் நிலையம் சென்று இந்த லவ் ஜிஹாத் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தௌபிக் ஆலம் தற்போது வளைகுடாவில் வசித்து வருகிறார். வழக்கை விசாரித்து வருகிறோம் என காவல்துறை கண்காணிப்பாளர் கதிஹார் தெரிவித்துள்ளார்.