தேச ஒற்றுமைக்கு சவால் விடும் அமைச்சர்

கேரள உயர்கல்வித் துறையில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடதுசாரிக் கட்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின. இந்நிலையில், பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் “நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகிறேன் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் கூறி வருகிறீர்கள். எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் நியமித்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவை சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிடவும். உடனே நான் ராஜினாமா செய்கிறேன். கேரள நிதியமைச்சர் என்னை பார்த்து, உத்தரப் பிரதேசத்தில் பிறந்த ஒருவர் கேரளாவின் கல்வி முறையை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். பாரதத்தின் ஒற்றுமைக்கு அவர் சவால் விடுகிறார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது முதல்வரின் விருப்பம், எனக்கு அந்த அதிகாரம் கிடையாது. ஆனால் என் கடமையை நிறைவேற்ற நான் இவ்வளவும் செய்ய வேண்டும் என்பதால் குறைந்தபட்சம் இதை கேரள மக்களுக்கு தெரியப்படுத்தினேன்” என கூறினார்.