மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தலைவர்

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான சதீஷ் ஜார்கிகோளி, சமீபத்தில், பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஹிந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. தலைவர்கள், ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குஜராத், ஹிமாச்சல பிரதேச தேர்தல் மற்றும் வாக்கு வங்கிக்கு பயந்து காங்கிரஸ் தலைவர்களும் சதீஷ் ஜார்கிகோளியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அவரது கருத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என பின்வாங்கினர். பல ஹிந்து அமைப்புகள் போராட்டங்கள் அறிவித்தன. இதனையடுத்து, முதலில் தனது பேச்சில் இருந்து பின்வாங்க போவதில்லை என கூறியிருந்த சதீஷ் ஜார்கிகோளி, தற்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, மன்னிப்புகோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதைல் தனது பேச்சை திரும்ப பெறுவதாகவும் தன்னை ஹிந்துக்களுக்கு எதிரானவர் என கூற முயன்றவர்களை கண்டறிந்து விசாரணை செய்ய கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.