டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்தியா கேம் 2022’ என்ற சர்வதேச ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “தேசம் நேர்மறையான மாற்றங்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. வேளாண்மையும், வேளாண் பொருளாதாரமும் பாரதத்தின் பலம். பாரதத்தின் தற்போதைய சூழல், தேசிய அளவிலும் உலகளவிலும் நல்ல மாற்றங்களை அடைந்துள்ளது. அனைத்து வகைகளிலும் தேசத்தை வலுவானதாக்கும் திறனை தற்போது நாம் பெற்றுள்ளோம். அனைத்து அம்சங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியும். அரசு, விவசாயிகள், தொழில் துறையினர் என அனைவரும் ஒரே நோக்கத்தோடு பணியாற்றி நேர்மறையான தாக்கங்களை கொண்டு வர வேண்டும். வேளாண்மை லாபகரமாக அமைய உற்பத்தியும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்பட வேண்டும். ரசாயன உரங்கள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும், மண்வளம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். இவை அனைத்துமே விவசாய வளர்ச்சிக்கு அவசியம்” என்று குறிப்பிட்டார்.