பாரதத்தின் பொருளாதாரம் வலுவாக உள்ளது

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எப்) ஆசிய பசிபிக் பிராந்தியத்துகான தலைவர் ஷனகா ஜெயநாத் பீரிஸ், “உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், உணவு பொருள்களின் விலை அதிகரித்தது. பணவீக்கம் உச்சம் தொட்டது. இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் தடுமாற்றமடைந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக அளவில் அனைத்து மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தொடர்ச்சியாக 4 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான ஆசிய பசிபிக் நாடுகளின் நாணய மதிப்பு சரிந்துள்ளது. உலக அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சீனா இன்னும் தீவிரக் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் தொழில், வர்த்தகம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இப்படி, சீனாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையும் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு ஆபத்தாக உள்ளது. எனினும், ஒப்பிட்டளவில் ஆசிய பசிபிக் நாடுகளில் பாரதத்தின் பொருளாதாரம் மட்டுமே வலுவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.