பி.எப்.ஐ சதித்திட்டம்

தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) திகிலூட்டும் ஒரு சதித் திட்டத்தைக் கொண்டுள்ளதாக மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்) தெரிவித்துள்ளது. அதன்படி, பி.எப்.ஐ அமைப்பினர், அயோத்தியில் தற்போது கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலை தகர்த்துவிட்டு, அதே இடத்தில் பாபர் மசூதியைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக ஏ.டி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாரதம் சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டான 2047க்குள் பாரதத்தை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 18 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான், புனே மற்றும் பிற பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்ட ஐந்து பி.எப்.ஐ தலைவர்கள் நாசிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வகுப்புவாத கலவரத்தை பரப்ப சதி செய்ததாகவும், பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்கியதாகவும் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப் குழுவின் அங்கத்தினர்களாக இருந்தனர். பாரதம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 175 உறுப்பினர்களைக் கொண்ட குழு, நாட்டில் அழிவுகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சதி செய்வது குறித்து விவாதித்தது. அவர்கள் நாட்டில் கடுமையான கலவரங்களையும் சமூக அமைதியின்மையையும் செயல்படுத்த திட்டமிட்டனர் என கூறப்படுகிறது.