குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “பாரதத்தின் வளர்ச்சிக்கு இது தான் சரியான தருணம். குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பா.ஜ.க அல்ல. தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில், தந்தை, மகன், மருமகன் ஆட்சி செய்கின்றனர். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தமிழகத்தில் தரமற்ற அரிசியை தான் தி.மு.க அரசு வழங்குகிறது. தி.மு.க அமைச்சர்கள் பிரதமர் மோடியை தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் படத்தை வெளியிட பயப்படுகின்றனர். மத்திய அரசின் திட்டங்களால், தமிழக மக்கள் பயனடைந்தாலும், அதனை இங்குள்ள அரசு மறைக்கிறது” என கூறினார். பின்னர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசுகையில், “ஒரே மாதத்தில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளனர். அவர்கள் இங்கு, ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். ஒரே நேரத்தில் இத்தனை அமைச்சர்கள் வருவது இதுவே முதல்முறை” என கூறினார்.