தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம், தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் பேசுகையில், ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டருக்கு 31 – 41 ரூபாய், எருமைப் பால் லிட்டருக்கு 41 – 51 ரூபாய் என கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும். இதனை உடனடியாக அமல்படுத்தக் கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் அக்டோபர் 17 முதல் 20 வரை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகங்கள் முன் மாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். போராட்டத்துக்கு தமிழக அரசு செவிசாய்க்காத பட்சத்தில், 21 முதல் காலவரையற்ற பால் கொள்முதல் நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார்.