கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. அதன் அடுத்தகட்டமாக, இது குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, இது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதா, நினைவுச் சின்னத்தை பார்வையிட வரக்கூடிய பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா, சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் அங்கிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது.