அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டம்

டெல்லி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது, பா.ஜ.கவின் டெல்லி பொதுச் செயலாளரும், டெல்லி மாநகராட்சி (என்.டி.எம்.சி) உறுப்பினருமான குல்ஜீத் சிங் சாஹல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட சில கேள்வி பதில்களை கூட்டத்தில் எடுத்து வைத்தார். இதற்கு பதில் அளிக்கமுடியாத கெஜ்ரிவால், கோபத்துடன் கூட்ட அரங்கில் இருந்து வேகமாக சென்றுவிட்டார். கூட்டத்தில் இருந்து அவர் ஓடிப்போன வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கேஜ்ரிவால் டெல்லி மாநகராட்சியின் முன்னாள் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. கல்வித் துறைக்கு சாஹல் சமர்ப்பித்த ஆர்டிஐ விண்ணப்பத்தில், அவர் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். முதல் கேள்விக்கான பதிலில், 2015 முதல், முதல்வர் கெஜ்ரிவால் என்.டி.எம்.சியின் கீழ் உள்ள ஒரு பள்ளிக்குக்கூட விஜயம் செய்யவில்லை என்பது தெரியவந்தது. 2 மற்றும் 3வது கேள்விக்கான பதிலில், என்.டி.எம்.சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் ஆசிரியர்களுடனும் முதல்வர் கெஜ்ரிவால் ஒருமுறை கூட பேச்சு நடத்தவில்லை என்பது தெரியவந்தது. 4வது கேள்விக்கான பதிலில், என்.டி.எம்.சி பள்ளிகளின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் கெஜ்ரிவால் விவாதிக்கவில்லை என்பது தெரியவந்தது. 5வது பதிலாக, 298 ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கைக்கு கெஜ்ரிவால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்தது. 7வது கேள்விக்கு பதிலளித்த என்.டி.எம்.சியின் கல்வித் துறை, 2015 முதல் கெஜ்ரிவால்  தனது எம்.எல்.ஏ நிதியில் இருந்து மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரு பைசா கூட கெஜ்ரிவால் விடுவிக்கவில்லை என்று  கூறியுள்ளது.