தமிழகமெங்குக் பயங்கரவாத பதற்றம்

தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர் என்பதற்கு சமீப காலமாக நடைபெற்று வரும் சம்பவங்களே சாட்சி. கடந்த மூன்று நட்களில் கோவையில் பா.ஜ.க அலுவலகம், ஒப்பணகார வீதியில் உள்ள பா.ஜ.க பிரமுகரின் ஜவுளி நிறுவனம், பா.ஜ.க நிர்வாகி, ஹிந்து முன்னணி நிர்வாகி வீடு, வாகனங்கள் உட்பட 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால்,அதிவிரைவுப் படையினர் 400 பேர், கமாண்டோ படையினர் 100 பேர் உட்பட 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உளவுத்துறை உதவி ஆணையர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் மட்டுமல்ல, ஈரோட்டில் பாஜ.க பிரமுகரின் பர்னிச்சர் கடை மீது தாக்குதல், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பிளைவுட் கடையில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு, பொள்ளாச்சி, திண்டுக்கல், திருப்பூர் என பல பகுதிகளில் பா.ஜ.க, ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல் என பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. கோவை பயங்கரவாத சம்பவம் தொடர்பாக, கல்லாமேட்டைச் சேர்ந்த இப்ராஹிம், ஆரிஸ், ஜபருல்லா ஆகியோரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் பின்னர் இரவோடு இரவாக அவர்கள் மூவரையும் விடுவித்துவிட்டனர். இந்த பயங்கரவாத தொடர் தாக்குதல்கள் காரணமாக தமிழகமெங்கும் ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க அலுவலகங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, சமீபத்தில் நாடு முழுவதும் பி.எப்.ஐ மீது நடத்தப்பட்ட சோதனைக்கும் இதற்கும் உள்ள தொடர்பை காவல்துறையினர் கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.