இங்கிலாந்துக்கு தலைகுனிவு

இங்கிலாந்தில் ஹிந்துக்களுக்கும் பாரத வம்சாவளியினருக்கும் எதிராக திட்டமிட்ட வகையில் பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம்கள் வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இது சர்வதேச சமூகத்தில் இங்கிலாந்துக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹிந்து ஆன்மிகவாதியும், அரசியல் ஆர்வலருமான சாத்வி ரிதம்பரா, லண்டனின் பர்மிங்காமில் உள்ள துர்கா பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி தற்போது பாதுகாப்பு காரணங்கள் கருதி ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வருவதற்கு திட்டமிட்டிருந்த கோயிலில்தான் சமீபத்தில் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் ஒன்றுகூடி ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டு கற்கள், பாட்டில்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாத்வி ரிதம்பரா, “ஆமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து லண்டனுக்கும் பின்னர் பாரதத்திற்கும் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் (கும்பல்) ஊடகங்கள் மீது அழுத்தத்தையும் உருவாக்கியுள்ளனர். பாரதத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், ஹிந்து சமூகத்தினருக்கு அச்சத்தை விதைக்க முயல்கின்றனர். அவர்கள் ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்கவும், அதற்கான பிரச்சாரத்தை நடத்தவும், அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் முயற்சி செய்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.