பாரதத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் கள்ள நோட்டுகளின் மிகப்பெரிய சப்ளையராக இருந்தவர் முகமது தார்ஜி என்கிற லால் முகமது. இவர் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள அவரது மறைவிடத்திற்கு வெளியே இருசக்கர வாகத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், ஐ.எஸ்.ஐயின் உத்தரவின் பேரில், பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து நேபாளத்திற்கு போலி இந்திய கரன்சிகளை கொண்டு வந்து அங்கிருந்து நமது நாட்டுக்குள் சப்ளை செய்து வந்தவர். மேலும், தாவூத் இப்ராஹிமின் ‘டி’ கேங்குடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. காத்மாண்டுவில் கோதாடர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காரில் இருந்து இறங்கிய லால் முகமது மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்ட சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவரை சுட்டவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.