விஜிலென்சின் கழுத்தை நெரிக்கும் அரசு

கிடப்பில் உள்ள 140க்கும் மேற்பட்ட முக்கிய கோப்புகளை விசாரிக்க கேரள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேரள உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இந்த கோப்புகள் கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. 121 கோப்புகள் மீதான விசாரணைக்கு அனுமதியும், 4 கோப்புகளில் முதற்கட்ட விசாரணையும், 15 வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யவும் அனுமதியை லஞ்ச ஒழிப்புத்துறை கோரியுள்ளது. இந்த கோப்புகளில் இடதுசாரி கட்சியை சேர்ந்த தலைவர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. “ஊழல் தடுப்பு சட்டத்தில் 17(ஏ) திருத்தங்கள் தான் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது. இதன் மூலம், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மீதான விசாரணை, வழக்குகள் போன்றவை அரசின் அனுமதியுடன் மட்டுமே தொடங்கப்படும். இதனை பயன்படுத்தி இடதுசாரி அரசு தனக்கு நெருக்கமானவர்களின் கோப்புகளை மறைப்பதுடன் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துகிறது. விஜிலென்ஸின் அனுமதி கோரிக்கையை 3 மாதங்களில் அரசு முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்கு நான்கு ஆண்டுகளாக கோப்புகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்காமல் சட்டம்  அமைதியாக உள்ளது” என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.