ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் ஷா சவுஹா கிராமத்தில் முஸ்லிம் மதம் தொடர்பான மத பாடங்களை கற்றுத்தரும் ஒரு மதராசா உள்ளது. இந்த மதரசாவில் பயின்றுவந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால், சமீரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் காணாமல் போன சிறுவன் சமீர், அவன் படித்து வந்த மதரசாவில் உள்ள கீழ்தளத்தில் மண்ணில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்தனர். இவ்வழகை விசாரணை செய்த அதிகாரிகள், சமீரை அதே மதப்பள்ளியில் பயின்றுவந்த சகமாணவனான 13 வயது சிறுவனே கொலை செய்து புதைத்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்த விசாரணையில், மத பாடம் படிக்க விருப்பம் இல்லாததால் அந்த மதரசாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமீரை கொலை செய்து உடலை மத பள்ளியின் கீழ் தளத்தில் புதைததாக அந்த சிறுவன் தெரிவித்தான். இதனையடுத்து கொலை செய்த சிறுவனை சிறுவர் காவலர்கள், சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.