இதுதான் பாரதம்

சவுதி அரேபியாவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரியாத் நகரில் வசிக்கும் பாரத சமூகத்தினருடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உலகம் முழுவதிலும் இருந்து 70 லட்சம் பேரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளோம். வேறெந்த நாடும் இதுபோன்று செய்ததில்லை. கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த காலகட்டத்துல், வெளிநாட்டில் வசிப்போரை பாரதம் அழைத்து வருவதற்காக மிக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. இதுதான் பாரதம். அதனை உலகம் இன்று பார்த்து வியந்துகொண்டுள்ளது” என பேசினார். முன்னதாக, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கொரோனா பரவலால் பயணத் தடைகள் விதிக்கப்பட்ட சூழலில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த பாரத நாட்டினரை மீட்கும் மிக பெரிய சவாலான பணியை மத்திய அரசு முன்னெடுத்தது. அதில், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், விசா காலாவதி ஆனவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்து தவித்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்கப்பட்டனர்.