மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை, 14 மாநிலங்களுக்கான, பகிர்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தின் ஆறாம் மாதத் தவணை ரூ. 7,183.42 கோடியை விடுவித்துள்ளது. 15வது நிதி ஆணையக் கூட்டத்தின் பரிந்துரையின்படி இது விடுவிக்கப்பட்டுள்ளது. 15வது நிதி ஆணையக் கூட்டத்தில், மானியமாக, 2023ம் நிதியாண்டில், 14 மாநிலங்களுக்கு ரூ. 86,201 கோடியை விடுவிக்க பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட மானியத்தொகை, மாநிலங்களுக்கு 12 மாதத் தவணைகளில் சமமான அளவில் விடுவிக்கப்பட்டு வருகிறது. 6வது மாதத் தவணை தற்போது வெளியிடப்பட்டதன் மூலம், இந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் அளவு ரூ. 43,100.50 கோடிகளாகும். பாரத அரசியலமைப்பின் 275வது பிரிவின்கீழ், பகிர்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய், பற்றாக்குறை மானியங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்படுகின்றன. வருவாய் கணக்குகளில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்தற்காக, அடுத்தடுத்த நிதி ஆணையக் கூட்டத்தின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கான மானியங்கள் விடுவிக்கப்படுகின்றன.