லவ் ஜிஹாத் – கிறிஸ்தவ அமைப்பு எச்சரிக்கை

கேரளாவில் உள்ள தெல்லிச்சேரி உயர் மறைமாவட்டம், பயங்கரவாதிகள் கிறிஸ்தவ வீடுகளில் இருந்து இளம்பெண்களை லவ் ஜிஹாத் மூலம் காதல் வலையில் விழவைத்து தங்கள் திட்டங்களுக்கு இழுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. எட்டு நாள் தவக்காலத்தின் ஒரு பகுதியாக பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி வெளியிட்ட ஆயர் கடிதத்தில், பயங்கரவாதிகளால் பின்னப்படும் இந்த ‘காதல் பொறிகள்’ குறித்து இளம் வயதினர்களுக்குக் கற்பிக்க மறைமாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மறுசீரமைத்து நட்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. “எங்கள் பெண்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மதவெறியர்களின் வலையில் பிள்ளைகள் சிக்கி தவிக்கும் பெற்றோரின் துயரங்களுக்காக பிரார்த்தனை செய்வோம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இக்காலத்தில் புனித அன்னையை நேசிப்பது போல் பெண்மையையும் மதிக்க வேண்டும். பயங்கரவாத குழுக்களின் வலையில் நமது குழந்தைகள் விழக்கூடாது என்பதற்காக, டீன் ஏஜ் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை இலக்காகக் கொண்டு, பேராயர் கல்வி மையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஆயர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.