அசாமில் மதரசாக்கள் பயங்கரவாதிகளின் கூடாரங்களாக செயல்பட்டு வந்ததை அம்மாநில அரசு சமீபத்தில் கண்டுபிடித்தது. இதுவரை பயங்கரவாதிகள், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில், ஆங்கீகாரம் பெறாத மதரஸாக்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்லது. வரும் அக்டோபர் 5ம் தேதிக்குள் இந்த ஆய்வுகளை முடித்து அறிக்கை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த ஆய்வில், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கற்பிக்கப்படும் பாடங்கள், மதரசாக்களின் தொடர்புகள், அரசு சாரா அமைப்புகளுடன் அதன் தொடர்பு போன்ற தகவல்களும் திரட்டப்பட்டு வருவதாக உத்தரப் பிரதேச மாநில வக்ஃப் வாரியத்துறை அமைச்சர் தனிஷ் ஆஸாத் அன்சாரி தெரிவித்துள்ளார்.