ஆர்.எஸ்.எஸ் அகில பாரதிய சமன்வய பைட்டக்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் அகில பாரத பிரச்சார் பிரமுக்கான சுனில் அம்பேகர், “ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் ஊக்குவிக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கியப் பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் (அகில பாரதிய சமன்வய பைட்டக்), இந்த ஆண்டு செப்டம்பர் 10, 2022 முதல் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெறும். ஆண்டுக்கொரு முறை இந்த தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், அகில பாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபல, ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் சங்கத்தின் மற்ற முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் 36 அமைப்புகளின் பிரதிநிதிகளில் பி.எம்.எஸ் சார்பாக ஹிரனய்மை பாண்டியா மற்றும் B. சுரேந்திரனும் வி.ஹெச்.பி சார்பில் அலோக் குமார் மற்றும் மிலிந்த் பராண்டே, ஏ.பி.வி.பியைச் சேர்ந்த ஆஷிஷ் சௌஹான் மற்றும் நிதி திரிபாதி, பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பி.எல்.சந்தோஷ், பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் தினேஷ் குல்கர்னி வித்யா பாரதி சார்பில் ராமகிருஷ்ண ராவ், கோவிந்த் மொஹந்தி, வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் சார்பில் வந்தனியா சாந்தக்கா சுஸ்ரீ அன்னதனம் சீதக்கா, ராமச்சந்திர கரடி மற்றும் அதுல் ஜோக் ஆகியோர் அடங்குவர். இந்த அமைப்புகள் சமூகத்தின் பல்வேறு துறைகளில் தேசிய உணர்வுடன் செயல்பட்டு வருகின்றன.

இக்கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் தங்களின் பணிகள், சாதனைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். கல்வி, புத்திஜீவிகள், பொருளாதாரம், சேவை மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற துறைகளில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் இந்த நிறுவனங்கள் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், சுற்றுச்சூழல், குடும்பம் (பரிவார் பிரபோதன்) மற்றும் சமாஜிக் சம்ரஸ்தா தொடர்பான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த அமைப்புகளில் செயல்படும் சுயம்சேவகர்களுடன் ஆர்.எஸ்எ.ஸ் ஒருங்கிணைக்கிறது” என தெரிவித்தார்.