ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹிந்து பட்டியலின குடும்பங்கள் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். தகவல் கிடைத்ததும் மேதினிநகர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு விரைந்தனர். விரட்டப்பட்ட குடும்பங்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கியதுடன் அதே கிராமத்தில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஹிந்துக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை உறுதி செய்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹிந்துக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை உறுதி செய்த போலீசார், போதிய பாதுகாப்புடன் அவை சீரமைக்கப்படும் என தெரிவித்தனர். “நாங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தோம், ஆனால் மருமடு கிராமத்தில் வசிக்கும் பலர், திங்களன்று எங்களை வலுக்கட்டாயமாக கிராமத்தை விட்டு வெளியேற்றினர். வீடுகளை சேதப்படுத்தினர். அவர்கள் எங்கள் உடமைகளை வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள காட்டில் இறக்கிவிட்டனர்,” என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.