பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 27 மற்றும் 28 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 27 மாலை அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். ஆகஸ்ட் 28 அன்று காலை, புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நிலநடுக்க நினைவிடத்தையும் அருங்காட்சியகம் பிரதமர் தொடங்கிவைப்பார். மேலும் புஜ் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களையும் திட்டங்களை தொடங்கி வைப்பார். மாலையில் பாரதத்தில் சுசூகி நிறுவனத்தின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், காந்தி நகரில் நடைபெறும் விழாவில், பிரதமர் உரையாற்றுவார். ரூ. 7,300 கோடி முதலீட்டில் ஹன்சால்பூரில் அமையவிருக்கும் மின்சார வாகன பேட்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதே போல் ரூ. 11,000 கோடி முதலீட்டில் ஹரியானாவின் ஹர்கோடாவில் துவங்கப்படவுள்ள பயணிகள் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டுவார்.