கேரள உயர்நீதிமன்றம் தடை

கேரள இடதுசாரி கட்சியின் (சி.பி.எம்) தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் செயலாளருமான கே.கே ராகேஷின் மனைவி பிரியா வர்கீஸ் கண்ணூர் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மற்றொரு பேராசிரியை ஸ்கரியா என்பவர் தொடுத்த வழக்கில், ஸ்காரியாவின் ஆராய்ச்சி மதிப்பெண் 651. ஆனால், பிரியா 156 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். பிரியா நேர்காணலில் 32 மதிப்பெண்கள் பெற்றார், ஸ்கரியா 30 மட்டுமே பெற்றார். ஸ்காரியா 13 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் அனுபவத்தை கொண்டுள்ளார். ஆனால்,  பிரியாவுக்கு அடிப்படைத் தகுதியான எட்டு வருட அனுபவம்கூட இல்லை என கூறப்பட்டிருந்தது. இதன் மூலம், பிரியா வர்கீஸ், பல்கலைக் கழகத்தின் விதிகளையும் தகுதியையும் மீறி இடதுசாரிகளின் துணையுடன் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. உயர்நீதிமன்றம் தற்போது தடை விதித்திருப்பது முதல்வர் பினராயி மற்றும் அவரது இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு கடும் பின்னடைவாகும். இது ஆளுநரின் உறுதியான நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.