டெல்லி அரசின் அடுத்த ஊழல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அமைத்த மூன்று பேர் கொண்ட குழு, டெல்லி போக்குவரத்துத்துறை, 1,000 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலும் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்திலும் நடைமுறைக் குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இதில் ஊழல் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளன என அறிக்கை வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த ஊழல் குறித்து பா.ஜ.க கேள்வி எழுப்பியதை அடுத்து, உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதனையடுத்து, இது குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. டெல்லி அரசு சமீபத்தில் மதுபான கொள்முதல் ஊழலில் வசமாக சிக்கியுள்ள நிலையில், தற்போது இந்த பேருந்து ஊழலும் அதற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.