ஆளுநர் அமைத்த விசாரணை குழு

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள பல்கலைக் கழகங்களில் நிகழும் உறவுமுறை நியமனங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அங்குள்ள பல்கலைக் கழகங்களில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சிக்கு சாதகமான அதிகாரிகளின் உறவினர்கள் உரிய தகுதிகளின்றி சட்டவிரோதமாக உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆளுநர் இதனை அறிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசே நடத்தவும் அதில் ஆளுநரின் கட்டுப்பாட்டை பறிக்கவும் கேரள இடதுசாரி அரசு முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.