பாரத மாதா என்பவள் நமது பாரதத்தாய் மட்டுமல்ல அவள் அந்த பராசக்தியின் வடிவம். பாரத மாதாவை பாரதத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேசமாக மட்டுமல்ல தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் லக்னோவின் மாளவியா நகரில் உள்ள சிஷு பாரதிய வித்யாலயா என்ற பள்ளியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஒரு நாடகம் நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம் மாணவர்கள் சிலர் பாரத மாதாவின் கிரீடத்தை அகற்றிவிட்ட பிறகு, பாரதமாதா முஸ்லிம்கள் பாணியில் தொழுகை செய்வது போன்ற காட்சி திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இது அங்குள்ள ஹிந்துக்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். புகாரின் பேரில் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.