அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய ஒரு முஸ்லிம் பயங்கரவாதி, சல்மானை கத்தியால் குத்தினார். இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த ருஷ்டி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் ஜாபர் ருஷ்டி தெரிவித்துள்ளார். தந்தை உடல்நிலை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சல்மான் ருஷ்டிக்கு வென்டிலேட்டர் மற்றும் கூடுதல் ஆக்ஸிஜன் கழற்றப்பட்டது. அவரால் சில வார்த்தைகளைச் பேச முடிந்தது. நாங்கள் மிகவும் நிம்மதியடைந்துள்ளோம். உலகம் முழுவதிலும் இருந்து அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.