இதுதானோ இவர்களின் தேசப்பற்று?

பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை நாடு கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் ஆகஸ்ட் 2 முதல் 15 வரையில் மூவர்ணக் கொடியை காட்சிப் படமாக வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தேசத்தின் சுதந்திரம், அதற்கு பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத்தின் மக்கள், பாரம்பரியம், கலாச்சாரம், சாதனைகள், புகழ்பெற்ற பாரத வரலாறு ஆகியவற்றை நினவு கூறும் விதமாகவும் பெருமைபடுத்தும் விதமாகவும் பிரதமர் விடுத்த இந்த வேண்டுகோளுக்கு பொதுமக்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் செவிசாய்த்தனர். தங்கள் சமூக ஊடகக்க் கணக்குகளில் தேசியக்கொடியை காட்சிப் படமாக வைத்தனர். அவ்வளவு ஏன், காங்கிரஸ், தி.மு.க கட்சிகள்கூட பிரதமரின் வேண்டுகோளை ஏதோ ஒருவிதத்தில் நிறைவேற்றின. ஆனால், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தோழமை கட்சியான முஸ்லீம் லீக் ஆகியவை கடைசிவரை அதன் சமூக உடகக் கணக்குகளில் தங்களின் கட்சி சின்னத்தை மட்டுமே வைத்து தங்களின் தேசப்பற்று என்னவென்பதை வெளிப்படுத்தின. பிரிக்கப்படாத பாரதத்தை ரத்தக்களரியான பிரிவினைக்குள் தள்ளிய அகில இந்திய முஸ்லீம் லீக்கின் எஞ்சியிருந்த இந்திய உறுப்பினர்களால் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் 1948ம் ஆண்டு அன்றைய மதராஸில் இந்திய முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்) நிறுவப்பட்டது. இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), பாரதம் சுதந்திரம் அடைந்தபோது அந்த நாளை ‘கருப்பு தினமாக’ அனுசரித்தது. பாரத சீன போரின் போது சீன சார்பாக செயல்பட்டது. இந்த போரைத் தொடர்ந்து சி.பி.ஐ’யில் இருந்து பிரிந்து 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது என்பது வரலாறு.