கர்நாடக மாநிலம் சூரத்கல் அருகே கடிபல்லாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம், ரக்ஷா பந்தனை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் கட்டியுள்ள ராக்கி கயிற்றை அகற்றுமாறு கூறியுள்ளது. இந்த செய்தியை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் அதிருப்தி அடைந்தனர். கிறிஸ்தவ பள்ளி நிர்வாகத்தின் இந்த பிற்போக்குத்தனமான, மதசார்புடைய நடவடிக்கையை கண்டித்து ஹிந்து அமைப்பினரும் மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையறிந்த காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.