ஸம்ஸ்க்ருத ஸப்தாஹம்

ச்ராவண பூர்ணிமா தினம், ஸம்ஸ்க்ருத தினமாக 1969ம் ஆண்டிலிருந்து மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.  1999 – 2000ம் ஆண்டை ஸம்ஸ்க்ருத ஆண்டாக பாரத ரத்னா வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. நாடெங்கிலும், பாரதத்தின் மிகப்பழமையான பண்பாட்டு மொழியாம் ஸம்ஸ்க்ருதத்தைப் பற்றி பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் ச்ராவண பூர்ணிமா தினம், முந்தைய மூன்று நாட்களுக்கும், பிந்தைய மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஸம்ஸ்க்ருத ஸப்தாஹம் (ஸம்ஸ்க்ருத வாரம்) மத்திய அரசின் அறிவிப்பின்படி ஸம்ஸ்க்ருத பாரதி போன்ற அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு ஸம்ஸ்க்ருத வாரம் 08.08.2022 முதல் 14.08.2022 வரை நடத்திக்கொண்டுள்ளது. பிரஷ்ம தேவர் வேதோபதேசம் பெற்ற நாளே, ச்ராவண பூர்ணிமா தினமாகும். இதேநாளில் உபகர்மா (வேதத்தை படிக்க துவங்குவது) ஆவணி அவிட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்நாள் ஸம்ஸ்க்ருத தினமாகவும், ரக்ஷா பந்தன் தினமாகவும் விமர்சயாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இனிய ஸம்ஸ்க்ருத ஸப்தாக, ரக்ஷா பந்தன வாழ்த்துக்கள்.

முனைவர் ஆர். ராமச்சந்திரன்