முடிவுக்கு வந்த ஆக்கிரமிப்பு

உச்ச நீதிமன்றம், பெங்களூரு சாமராஜப்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் அங்கு ஒரு வருடத்தில் இரண்டு முறை தொழுகை நடத்த மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.  மீதமுள்ள நாட்களில் அதனை விளையாட்டு மைதானமாக பயன்படுத்த வேண்டும் என கூறியும் அது தொடர்ந்து வஃப் வாரியத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்தது. அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் ஒரு மதத்தின் எம்.எல்.ஏ போல செயல்பட்டு ஈக்தா மைதானத்தை வஃப் வாரியத்துக்கு தாரைவார்க்க வழிவகை செய்தார். பெங்களூரு மாநகராட்சி அதற்கு ஒத்துழைத்தது. முன்னதாக, இந்த மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை மைதானத்தில் நடத்துவதற்கு பி.பி.எம்.பி  அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஈத்கா மைதானத்தை வஃபு வாரியத்துக்குக் கொடுக்கும் பெங்களூரு மாநகராட்சியின் முடிவை கண்டித்து சாமராஜ்பேட்டை குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில் கடையடைப்பு, போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சூழலில் தற்போது, சட்ட விரோத வக்ஃப் ஆக்கிரமிப்பில் இருந்த ஈத்கா மைதான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அங்கு வரும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. அந்த மைதானம் அரசுக்கு சொந்தமானது. இதை மீட்க வேண்டி போராடிய மக்களுக்கும் தேசியவாதிகளுக்கும் இது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.