தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில், சமீபத்தில் சந்தித்து பேசியது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சில பொருட்கள், சேவைகளின் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. ஆனால், ஏதோ மத்திய அரசே அந்த பொருட்களின் மீது வரி விதித்திருப்பது போல எதிர்க்கட்சிகள் நாடகமாடி வருகின்றன,, பொது மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. எதிர் கட்சிகளின் பொய்களுக்கு பதிலடி தரும் விதத்திலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக மக்களிடம் உண்மைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் தமிழக பா.ஜ.க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தமிழில் எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள், பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.