70 ஆண்டுகளாக ஹிந்துவிரோத ஆட்சி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பல்வேறு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்த அகில பாரத ஹிந்து மகாசபா பொதுச்செயலர் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள், “கோயில்களில் நான்கு வேதங்கள், நாலாயிரம் திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் படிப்பதுக்கு ஓதுவார்கள் இல்லை. கோயில்களில் பூஜைகள் சரியாக நடப்பதில்லை. கோயில் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க வேண்டும். இத்தகைய செலவுகளுக்கு மட்டுமே கோயில் வருமானத்தை செய்ய வேண்டும். அரசும் நிதி வழங்க வேண்டும். ஆனால், கோயில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது. அந்தந்த பகுதி ஹிந்துக்கள், அங்குள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில், 70 ஆண்டுகளாக ஹிந்து விரோத அரசுகள் நடந்து வருகிறது. அவர்கள் இதற்கு பலவிதமான இடையூறுகள் செய்து வருகின்றனர். கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, ஹிந்து இளைஞர்கள் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநில கோயில்களின் நிலைகள், தேவையான வசதிகள் குறித்து அறிக்கையாக தயார் செய்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அம்மாநில முதல்வர்கள், அறநிலையத்துறை அமைச்சர்களிடம் விரைவில் வழங்க உள்ளோம். அதன் அடிப்படையில் மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சட்டப் போராட்டத்தை துவங்குவோம்” என தெரிவித்தார்.