முழு அரசாங்க அணுகுமுறை அவசியம்

டெல்லியில் நடைபெற்ற ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள் (EPCs) மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு நாட்டின் ஏற்றுமதி சூழ்நிலையை மதிப்பாய்வு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ‘முழு அரசாங்க’ அணுகுமுறை ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாரதத் தூதரகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள் மற்றும் தொழில்துறைகள் “உள்ளூர் பொருட்கள் உலகிற்கு செல்கிறது மற்றும் பாரதம் உலகிற்காக உருவாக்குகிறது” என்பதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. பாரத ஏற்றுமதியாளர்கள் உலக அளவில் போட்டியிடுவதற்கு ஆதரவளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. உலகளாவிய வர்த்தகத்தின் அடிப்படையில் பாரத்த்தின் உண்மையான திறனை அடைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நாடு இதுவரை இல்லாத வகையில் சாதனை அளவாக 667 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி  செய்துள்ளது. இது கடந்த நிடியாண்டைவிட 34.5 சதவீதம் அதிகம். இவ்வாண்டு ஜூலை 2022க்குள், நமது  ஏற்றுமதிகள் 156 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட 19 சதவீதம் அதிகம்.  இச்சூழலில், தொழில்துறை பிரதிநிதிகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் ஆய்வு செய்து, போட்டி நமக்கு சாதகமாக உள்ள பகுதிகளை அடையாளம் காண வேண்டும். இந்த ஆண்டு இங்கிலாந்துடன் பல பரிமாண கூட்டாண்மை ஒப்பந்தம் இறுதியாகும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.