கோவை குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட அப்துல் நாசர் மதானி கைதை எதிர்த்து கேரள மாநிலம் கலமசேரி என்ற இடத்தில், 2005ல் தமிழகத்தின் சேலம் மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே இயங்கி வந்த தமிழக அரசுப் பேருந்தை எரித்த வழக்கில், சபீர் புஹாரி, நசீர் தடியந்தவிடா மற்றும் தாஜூதீன் என்ற 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த எர்ணாகுளம் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனைகளை அறிவித்தது. அதன்படி, நசீர் தடியந்தவிடா மற்றும் சபீர் புஹாரிக்கு 7 வருட கடும்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 235,000 அபராதமும் தாஜூதீனுக்கு 6 வருட சிறைத்தண்டனையும் ரூ. 160,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தலைமறைவான ஒருவர் உட்பட மீதமுள்ள 8 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.