கன்வர் யாத்திரை என்பது வட பாரதத்தில் விஷேஷமானது. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான ஹிந்துக்கள், ஆண்டுதோறும் சாதுர்மாஸ்யத்தின் முப்பது நாட்கள் வரை, சோமவார விரதம் மேற்கொண்ட பின்னர், காவடி ஏந்தி, தொலைதூரத்தில் உள்ள ஹரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை கொண்டு வருவார்கள். அதனை கொண்டு தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகாசிவராத்திரி அன்று அபிஷேகம் செய்வார்கள். இப்படி யாத்திரை மேற்கொள்வோரை ‘கன்வாரியாக்கள்’ என்று அழைப்பர். ஒவ்வொரு ஆண்டும் வட பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் கன்வாரியாக்கள் மீது சிறுபான்மையினரின் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அவ்வகையில் இந்தமுறை டெல்லி, உத்தரப் பிரதேசம் ,பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலமுறை கன்வர் யாத்திரை சென்ற கன்வாரியாக்கள் மீது முஸ்லிம் அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கன்வாரியாக்கள் கொண்டுவரும் புனித கங்கை நீரில் எச்சில் துப்புவது, அவர்கள் மீதி இறைச்சி வீசுவது, அழுக்கு நீர் ஊற்றுவது, கற்களை வீசுவது என பல அடாவடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இதனை வடமாநிலங்களில் உள்ள ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்துவிட்டன. மேலும், சில ஆங்கில ஊடகங்கள் கன்வாரியாக்களை ‘குண்டர்கள்’ என்று முத்திரை குத்துவதன் மூலம் இந்தத் தாக்குதல்களைத் தூண்டி வருகின்றன. என குற்றம் சாட்டப்படுகிறது.