ஜஹாங்கீர் புரியில் ஹிந்துக்கள் நடத்திய ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது அப்பகுதி முஸ்லிம்கள் கற்கள், பாட்டில்கள், தடிகள், பெட்ரோல் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஹிந்துக்கள், பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் என பலரும் படுகாயமடைந்தனர். இவ்வழக்கில் தலைமறைவான முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான சன்வர் மாலிக் என்பவரை டெல்லி காவல்துறை ஜஹாங்கீர் புரியில் கைது செய்தது. முன்னதாக மேற்கு வங்கம் உட்பட பல பகுதிகளில் தலைமறைவாக இருந்த சன்வர் மாலிக் ஜஹாங்கீர் புரிக்கு வந்த ரகசியத் தகவல் கிடைத்தது. டி.சி.பி அனில் சர்மா தலைமையிலான குழு அவரை பிடிக்க சென்றபோது சன்வர் மாலிக் தப்பியோட முயற்சித்தார். அவரை தப்புவிக்க அங்கிருந்த முஸ்லிம் குடியிருப்பாளர்களும் உதவினர். அவர்கள், காவல்துறையினர் மீது செங்கற்களை வீசினர். இதனால் காயம் அடைந்தாலும் காவலர்கள் விடாமல் துரத்திச்சென்று மாலிக்கை பிடித்து கைது செய்தனர்.