பிறந்தநாள் விழாவில் மதமாற்றம்

உத்தரபிரதேசத்தில் உள்ள அசம்கர் மாவட்டம் விஷ்ணு நகரில் வசிக்கும் இந்திரகலா‌‌ என்பவர், தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடும் சாக்கில் பக்கத்து கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய கிராம மக்களைக் கூட்டிவந்தார். அந்த நிகழ்ச்சியின்போது இந்திரகலாவின் உதவியாளர்கள் கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் கிராம மக்களிடம் சில துண்டு பிரசுரங்களை கொடுத்து, நீங்கள் இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பாக அந்த பிரசுரத்தை படித்து கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தினர். மேலும் அங்கிருந்த சுவிசேஷகர்களும் கிராம மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை கவர்ந்திழுக்க முயன்றனர். கிறிஸ்தவ மதத்திற்கு வந்தால் பேய்கள் மற்றும் ஆவிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என பொய்யாக வாக்குறுதியளித்தனர். இதுகுறித்து சில கிராம மக்கள் பஜ்ரங்தள் உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் உள்ளூர் காவல்துறையினருக்கு இது குறித்து தெரிவித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு வந்த காவல்துறையினர் அந்த மதமாற்ற முயற்சியை தடுத்து நிறுத்தினர். காவல் துறையினரை பார்த்து பலர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் முக்கிய குற்றவாளியான இந்திரகலா மற்றும் அவரது ஐந்து கூட்டாளிகளான சுபகி தேவி, சாதனா, சம்தா, அனிதா, சுனிதா ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். அந்த இடத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை கைப்பற்றினர். இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை காவல்துறை தொடங்கியுள்ளதாக எஸ்.பி சித்தார்த் குமார் கூறினார்.