தி.மு.க உடன் கூட்டணி கிடையாது

தமிழக பாஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், பால் பாக்கெட்டில் எடை குறைவு  விவகாரத்தில், ஒவ்வொரு பால் பாக்கெட்டிலும் 60 முதல் 70 கிராம் அளவிற்கு பால் குறைவாக இருந்தால் தமிழகத்தில் ரூ. 2 கோடி வருவாய் அரசுக்கு வரவேண்டியது வராமல் இருக்கிறதோ என அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது அரசின் நம்பிக்கை மீதான கேள்வியை ஏற்படுத்துகிறது. பா.ஜ.,வின் கொள்கைக்கு எதிராகவே தி.மு.கவினர் பிரிவினைவாதம் பேசி வருகின்றனர். அதுவும் மேடையில் முதல்வரை வைத்துக்கொண்டே தி.மு.க முக்கிய தலைவர்கள் பேசி வருகின்றனர். இது பா.ஜ.கவின் டி.என்.ஏவுக்கு எதிரானது. அப்படியிருக்கும்போது எந்த காலகட்டத்திலும் தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது கட்சியின் மாநில தலைவரான என்னுடைய கருத்து. தேசிய தலைமையும் இதையே தான் சொல்லப்போகிறது. ஏனெனில் இது கட்சியின் அடிப்படை டி.என்.ஏ. ஒவ்வொரு தொண்டனுடைய உணர்வு. அப்படி இருக்கையில் பிரிவினை பேசும் சக்திகளோடு எப்படி பா.ஜ., கூட்டணி வைக்கும்? யாருடனும் கூட்டணி வைத்து கட்சி வளர்க வேண்டும் என்ற அவசியம் பா.ஜ.கவுக்கு கிடையாது. நாங்கள் தனித்தன்மையுடன் வளர்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.