அமலாக்க இயக்குனரகம் பள்ளி கல்வித்துறை உழல் தொடர்பாக சமீபத்தில், மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என கைப்பற்றியது. அவரை கடந்த ஜூலை 23 அன்று கைது செய்தது.இதனையடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து மமதா பானர்ஜி நீக்கினார். இந்நிலையில், இதுகுறித்து பார்த்தா சாட்டர்ஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர், “கட்சியின் உயர்மட்டத் தலைமை உட்பட திருணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் தனது செயல்பாடுகளுக்கு நெருக்கமானவர்கள். தகுதியில்லாதவர்களுக்கு அரசுப் பள்ளி வேலை வழங்குவதற்காக பணம் வசூலிக்கப்பட்டது அவர்கள் அனைவருக்கும் தெரியும்.நான் அந்த பணத்தின் பாதுகாவலராக மட்டுமே இருந்தேன்.ஒருபோதும் நான் பணம் வசூலிக்கவில்லை.கட்சியின் உத்தரவுபடிதான் செயல்பட்டேன்.மற்றவர்கள் தயாரித்த ஆவணங்களில் கையெழுத்திட்டேன்.பணமும் மற்றவர்களால் சேகரிக்கப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டது.சேகரித்த பணத்தில், பின்னாளில் பல நூறு கோடிகள் கட்சி பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டது.தொகையில் ஒரு பகுதி மட்டுமே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.நான் கைது செய்யப்படதும் மற்ற தலைவர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வதால் கட்சி தனது தலைவிதியைப் பற்றி முடிவெடுக்க இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது.அது முடிந்ததும் அவர்கள் என்னை கைகழுவி விட்டனர்.அர்பிதா முகர்ஜி பெயரில் நான் வாங்கிய சொத்துக்களை திருணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பார்வையிட்டனர்.கட்சி பணத்தை பதுக்கி வைப்பதற்கு நடிகை போன்ற முன்னணி நபர்கள் தேவைப்படுகின்றனர்.பலர் பணம் கொடுத்து ரயில்வே வேலைகளையும் இதேபோல பெற்றுள்ளனர்” என்று குற்றம் சாட்டியதாக ஐ.ஏ.என்எ.ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.