சமீபகாலமாக, ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவாக இருப்பதாக புகார்கள் வருகின்றன.சென்னையில் இரு தினங்களுக்கு முன் விற்பனை செய்யப்பட்ட 500 மி.லி., பால் பாக்கெட்டை எடை போட்டு பார்க்கும்போது அது வெறும் 430 கிராம் அளவே இருந்தது. பொதுவாக, 500 மி.லி ஆவின் பால் பாக்கெட்டில் கிராமில் கணக்கிடும்போது, பிளாஸ்ட்டிக் பாக்கெட்டின் எடை 2 கிராமையும் சேர்த்து 517 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஒரு பாக்கெட்டில் 87 கிராம் குறைவு என்றால் நாள்தோறும் விற்பனையாகும், 33 லட்சம் லிட்டர் பாலை கணக்கிடும்போது தினமும் 287,100 லிட்டர் பால் நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. ஆவின் அதிகாரிகள், ‘சென்னை, மாதவரம் பால் பண்ணையில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.அந்த இயந்திரத்தில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக, இந்த அளவு குறைவு ஏற்பட்டிருக்கலாம்.அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்கின்றனர்.எனினும் ஒரு நாளைக்கு இவர்கள் கொள்ளையடிக்கும் 2,87,100 லிட்டர் என்றால், இத்தனை நாளுக்காண கணக்கு எங்கே?மேலும், அதற்கான கவர், போக்குவரத்து உள்ளிட்ட வரவு செலவு கணக்கு, அதற்குண்டான பணம் எங்கே சென்றது?விலை குறைப்பால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிப்பதற்கும்,துறையின் முக்கிய புள்ளி உள்ளிட்டோருக்கு வருவாய் கிடைக்கவும், இந்த நுாதன செயலில் ஆவின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.